Posts

ஐந்து வயது சிறுவன் உருவாக்கிய காமிக்ஸ்

 நாம் எல்லோரும் காமிக்ஸ் கதைகளை சராசரியாக பத்து அல்லது அதற்குமேல் தான் படிக்கத் தொடங்கி இருப்போம், வெகு சிலருக்கு இன்னும் சிறு வயதில் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் ஒரு சிறுவன்  வெறும் ஐந்து வயதில் காமிக்ஸ் படைத்து சாதித்துள்ளான்!  நம்பவில்லயன்றாலும் அது நிஜம்!  அந்த சிறுவன் பெயர் ' மலாச்சாய் நிக்கோல்'( malachai Nicolle)  இவனது சகோதரர் ஈதன் நிகோல் ஒரு சிறந்த காமிக்ஸ் ஒவியர் ஆவார்.  மலாச்சயின் கற்பனையில் உருவான காமிக்ஸிற்கு அவன் அண்ணன் ஈதன் உருவம் கொடுத்தார்!  அது தான் 'ஆக்ஸ் காப்'(axe cop)  என்ற காமிக்ஸ் கதாபாத்திரம்! இருவரும் இணைந்து அதற்கான கதைகைளை உருவாக்கினர். கதையில் லாஜிக்கெல்லாம் கிடையாது! வெறும் மேஜிக்தான்! கதையின் ஆரம்பத்தில் நாயகன் ஒரு சராசரி போலீஸ்காரர் தான், அவர்  கையில் தீயணைப்பு வீரர் பயன்படுத்தும் கோடரி ஒன்று கிடைக்க அன்றிலிருந்து 'axecop'(கோடரி போலீஸ்) என பெயர் பெறுகிறார்! இவருக்கு துணையாக flute cop என்பவர் வருவார், அவர் திடீரென டைனோசர் வீரராக மாறிவிடுவார்! அயல்கிரக ஜந்துக்கள், ரோபோக்கள் சூப்பர் வில்லன்கள் என எக்கசக்கமான கற்பனை கதைக்களம்!
Recent posts